உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டு வந்தது ரஷ்யா! 471 வீரர்கள் சரணடைந்தனர்... முக்கிய தகவல்
உக்ரைனில் உள்ள 4 முக்கிய இடங்களை ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் நான்காம் நாளாக தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
இரு நாட்டின் போர் சண்டை காரணமாக உக்ரைன் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் பாதுகாப்பான இடங்களை தேடி சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டுவந்தது ரஷ்யா என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பெர்டியான்ஸ்க்ம் செர்னோபேவ்கா, கெனிஷெஸ்க், கேர்சான் பகுதிகளை ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இதோடு உக்ரைன் ராணுவ வீரர்கள் 471 பேர் தங்களிடம் சரணடைந்துள்ளதாகவும், ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.