ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: டெலிகிராமில் வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யா மீது உக்ரைன் புதிய ட்ரோன் தாக்குதல்களை சமீபத்தில் முன்னெடுத்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மூன்று ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது.
ரஷ்யா-வட கொரியா இடையிலான நட்புறவு ஒப்பந்தத்திற்கு பிறகு உக்ரைனிய பிராந்தியத்திற்குள் வட கொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
UAVs have hit at least three high-rise buildings in Kazan, Russia
— NEXTA (@nexta_tv) December 21, 2024
Photos and videos from the scene are being shared on local Telegram channels. pic.twitter.com/MN19u47uom
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் போர் பயிற்சி வழங்கி உதவி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள உயரமான கட்டிடங்களை குறிவைத்து உக்ரைனின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை ரஷ்யாவின் உள்ளூர் டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |