ஐரோப்பாவில் ரஷ்யர்களுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்: உக்ரைன் அமைச்சர் வலியுறுத்தல்
Ukraine Urges EU Should Ban Russians Entry: ரஷ்யர்களுக்கு ஐரோப்பா முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் ரஷ்யர்களுக்கு முழுமையான தடை
ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்ய குடிமக்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டரி சிபிஹா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ரஷ்யாவிற்கு எதிரான பயணத் தடையை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எஸ்டோனியா நாட்டின் நடவடிக்கையை போல ஐரோப்பாவின் பிற நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரே கொள்கையை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சிபிஹா வலியுறுத்தினார்.
இதன் மூலம் ரஷ்ய ராணுவத்தில் இணையும் ஒவ்வொரு பேரும் தங்களின் இந்த முடிவால் பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.