ரஷ்யா உடனான போர் நடவடிக்கை: அமெரிக்கா - உக்ரைன் இடையே உருவான ஒருமித்த கருத்து
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்து வருகிறது.

உக்ரைனின் சில பகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று ரஷ்யா உரிமை கோரி வரும் நிலையில், அதற்கு உக்ரைன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை வகுத்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் அமெரிக்கா உக்ரைன் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருமித்த கருத்து
புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா ரஷ்யா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் ரஷ்யா இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவின் அதிகப்பட்ச கோரிக்கையாக, ஒட்டுமொத்த டான்பாஸ் பகுதியையும் உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பதாகும்.
உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 70 சதவீதத்தையும் ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், உக்ரைன் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |