உக்ரைனை பாதுகாக்க உதவும் பிரான்ஸ் வழங்கிய பழைய மீன் வலைகள்
பிரான்ஸ் வழங்கிய பழைய மீன் வலைகள் தற்போது ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் இருந்து உக்ரைனை பாதுகாக்க உதவுகிறது.
பிரான்ஸின் பிரிட்டனி கடற்கரை பகுதியில் மீனவர்கள் பயன்படுத்திய பழைய மீன் பிடிக்கும் வலைகள், தற்போது உக்ரைனில் ரஷ்ய ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பு கருவியாக மாற்றப்பட்டுள்ளன.
Kernic Solidarites என்ற தொண்டு நிறுவனம், 280 கி.மீ நீளமான முதிர்ந்த குதிரை முடி வலைகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
இந்த வலைகள், monkfish போன்ற ஆழக் கடல் மீன்களை பிடிக்க பயன்படுத்தப்படும் வலிமையானவை.

இவை ட்ரோன்கள் பறக்கும் திசையில் வைக்கப்பட்டு, பறக்கும் போது பறவைகள் வலையில் சிக்குவது போல ட்ரோன்கள் சிக்கிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
முதலில் மருத்துவ முகாம்களை பாதுகாக்க இவை பயன்படுத்தப்பட்டாலும், தற்போது சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
உக்ரைனிய ட்ரோன்களும் எதிரி ட்ரோன்கள் மீது வலைகளை வீசும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் மீனவர்களும் இதேபோல் வலைகளை வழங்கியுள்ளனர்.
ஆனால், Kernic Solidarites நிறுவனம் தற்போது பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக, உக்ரைனியர்கள் நேரடியாக வலைகளை எடுத்துச் செல்லும் திட்டத்தில் உள்ளது.
வலைகள் ஒரு முழுமையான தீர்வு அல்ல. ஆனால், ட்ரோன்களுக்கு எதிரான பாதுகாப்பில் ஒரு முக்கிய கூறாக இருப்பதாக உக்ரேனிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |