உக்ரைன் அதிபர் ஆவதற்கு முன் செலென்ஸ்கி நடித்த காமெடி காட்சி! இன்றைய சூழலில் வைரலாக்கும் இணையவாசிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், உக்ரைனிய அதிபர் செலென்ஸ்கி நடிகராக இருந்தபோது வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன், ரஷ்ய இடையிலான இரண்டாம் சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 2) பெலாரஸில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ரஷ்ய இராணுவம் தொடர்ந்து உக்ரைனில் தாக்குதல் நடத்திவருகிறது. தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலடி கொடுக்க உக்ரைன் படை தயாராக உள்ளனர்.
முன்னதாக, திங்களன்று உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelensky) முறையாக விண்ணப்பித்தார். இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து எந்தவித நேர்மறையான பதிலும் கொடுக்கப்படவில்லை என்றாலும், உக்ரைன் விடுத்திருந்த கோரிக்கையை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளது. உக்ரைனை விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கான நடைமுறைகளும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த சம்பவத்தை அப்படியே சித்தரிக்கும் வகையில், செலென்ஸ்கி 2015-ல் நடித்து வெளியான காமெடி காட்சி ஒன்று வைரலாக்கப்பட்டுவருகிறது.
கலை நிஜ வாழக்கையை சித்தரிக்கிறது என்ற சிலர் நம்புகின்றனர். அது செலென்ஸ்கியின் வாழக்கையில் நிரூபணமாகிறது.
I can’t wrap my mind around the existence of this clip. pic.twitter.com/1XvBYWlMxg
— Vera Bergengruen (@VeraMBergen) March 2, 2022
இந்த வீடியோ உக்ரேனிய தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரான செர்வன்ட் ஆஃப் தி பீப்பிள் (Servant of the People) என்ற தொடரில் இருந்து எடுக்கப்பட்டது, இதில் செலென்ஸ்கி ஒரு முன்னாள் உயர்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியராக இருந்து உக்ரேனிய ஜனாதிபதியாக மாறுவதாக காட்டுகிறது.
உண்மையில், Zelensky 2019-ல் 70 சதவீத வாக்குகளுடன் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில், செலென்ஸ்கி ஒரு பிரீஃப்கேஸுடன் பெட்டியுடன் நடந்து செல்கிறார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் செலென்ஸ்கி பெட்ரோவிச் ஹோலோபோரோட்கோ என்று அழைக்கப்படுகிறார்.
அழைப்பில் முன்னாள் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சித்தரிக்கும் குரல் கேட்கிறது. அவர், "வாழ்த்துக்கள், உங்கள் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று கூறுகிறார்.
அதற்கு மிகவும் மகிழ்ச்சியடையும் செலென்ஸ்கி "உக்ரைனிய மக்களும் நாடும் இந்த செய்தியால் பெருமகிழ்ச்சிறது" என்று கூற, உடனடியாக, மெர்க்கல் கதாபாத்திரம் "என்னது உக்ரைனா, மன்னிக்கவும் இது Montenegro நாட்டுக்கான அழைப்பு" என்று கூறுகிறார். இதனால் கடுப்பான செலென்ஸ்கி, "F**k Putin" என கத்துகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
தற்போது உண்மையிலேயே செலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் விண்ணப்பித்துள்ள நிலையில், அவரது விருப்பத்தின்படி, உக்ரைன் ஒன்றியத்துடன் இணைக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. உக்ரைனின் விண்ணப்பத்திற்கு போலந்து, ருமேனியா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள.