ரஷ்யா ஏவுகணை தளங்களை அழிக்க தயாராக இருக்கிறோம்: எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி
ரஷ்ய ஏவுகணை தளங்களை அழிக்கப்போவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யா ஏவுகணை தளத்தை அழிக்க தயார்
உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் ரஷ்ய ஏவுகணை தளங்களை முற்றிலுமாக அழிக்க தயாராக இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உறுதியான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க புதன்கிழமை கீவ்விற்கு வந்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்குடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைன் - பிரித்தானியா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்
உக்ரைன் - பிரித்தானியா ஆகிய இருநாடுகளும் இணைந்து அதிநவீன போர் ஆயுதங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க உதிரி பாகங்கள் வழங்கும் நிறுவனங்கள் மீது சர்வதேச தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்யாவின் போர் இயந்திரங்களையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யக்கூடிய எந்தவொரு முயற்சியும் அவசியமானது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய ரஷ்ய தாக்குதலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மேம்பட்ட உபகரணங்களை பெற வேண்டியதன் அவசியத்தை இந்த இராஜதந்திர சந்திப்புகள் வெளிகாட்டியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |