இந்த நாட்டில் மட்டும் முடியாது... ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு மறுத்த உக்ரைன்
பிரபல ஐரோப்பிய நாடான பெலராஸில் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நட்பு நாடான பெலாரஸிலிருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
24ம் திகதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைககு வருமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, புடினுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்.
ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்ற புடின், பேச்சுவார்த்தைக்கு தங்கள் தூதரக குழுவை பெலராஸிக்கு அனுப்புவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய பெலராஸிக்கு தூதரக குழுவை அனுப்பி உள்ளதாகவும், அங்கு உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக உள்ளதாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது.
பெலராஸின் Gomel நகரில் பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே ரஷ்யா தயாராக இருப்பதாகவும், தற்போது உக்ரேனிய தூதரக குழுவிற்காக காத்திருப்பதாக புடினின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அமைதியை விரும்புகிறது, ஆனால் பெலராஸில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, ஏனெனில் தற்போது அந்நாட்டிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
போலாந்து தலைநகர் வார்சா, துருக்கியின் இஸ்தான்புல், அஜர்பைஜானின் தலைநகரம் Baku இந்த நகரங்களில் ஒன்று அல்லது உக்ரைனை மீது ஏவுகணைகள் ஏவப்படாத வேறு எந்த நகரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவிடம் நாங்கள் விருப்பம் தெரிவித்தோம் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.