மரியுபோலை சாம்பலாக்க முயற்சிக்கும் ரஷ்யா! புதிதாக 2 சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்
உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முழுமையாக அழித்து சாம்பலாக்கும் முயற்சியில் ரஷ்யா இன்று இரண்டு புதிய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இடைவிடாத ஷெல் தாக்குதலுக்கு உள்ளான முற்றுகையிடப்பட்ட உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை மீட்க உள்ளூர் அதிகாரிகள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்ட நிலையில், இன்று மரியுபோலில் இரண்டு "சூப்பர் சக்திவாய்ந்த குண்டுகளை" புடின் படை வீசியது.
அப்பகுதியிலிருந்து வெளியேற விரும்பும் குறைந்தது 1,00,000 பேரையாவது வெளியேற்ற அனுமதிக்குமாறு மாஸ்கோவிற்கு உக்ரைன் விடுத்த வேண்டுகோளுக்கு மத்தியில், மரியுபோல் நகரத்தில் இப்போது எதுவும் விட்டுவைக்கப்படவில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கூறினார்.
"அங்கே எதுவும் விட்டுவைக்கப்படவில்லை. இடிபாடுகள் மட்டுமே உள்ளன" என்று இத்தாலிய பாராளுமன்றத்தில் வீடியோ உரையில் 4,00,000 அமைதிக் கால மக்கள்தொகை கொண்ட மரியுபோல் பற்றி ஜெலென்ஸ்கி கூறினார்.
PC: REUTERS
அவர் பேசுகையில், மாரியுபோல் மீது ரஷ்யப் படைகள் இரண்டு பெரிய குண்டுகளை வீசியதாக நகர சபை கூறியது, ஆனால் உயிர் சேதம் அல்லது சேத விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஒரு வீடியோ உரையில், துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக், "அனைவருக்கும் போதுமான இடம் இருக்காது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் மரியுபோலில் வசிப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றும் வரை நாங்கள் வெளியேற்ற முயற்சிப்போம்" என்று கூறினார்.
"ஆக்கிரமிப்பாளர்கள் மரியுபோல் நகரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகிறது, அவர்கள் அதை தரையில் இடித்து சாம்பலாக்க விரும்புகிறார்கள்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.