மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை அடுத்து... ரஷ்யாவை புறக்கணிக்கும் மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் காரணமாக ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமான மூடுவதாக மெக்டொனால்ஸ் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து நாளுக்கும் 100,000 பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்து வந்த அமெரிக்கா, அதை ரத்து செய்வதாக சில மணி நேரம் முன்பு அறிவித்துள்ளது. இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவில் செயல்பட்டு வந்த மெக்டொனால்ட்ஸ் உணவகம் தங்களின் 850 கடைகளையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இதேப்போன்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் செயல்பாட்டை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
தற்போது COCA COLA மற்றும் பெப்சி நிறுவனங்கள் அந்த வரிசையில் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இந்த இக்கட்டான சூழலில் தங்கள் நிறுவனம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள COCA COLA நிர்வாகிகள், ரஷ்ய விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரஷ்யாவில் 7அப் மற்றும் மிரிண்டா உட்பட அனைத்து விற்பனையும் ரத்து செய்வதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் 62,000 ஊழியர்கள் பணியாற்றும் தங்களின் 850 உணவகங்களை மூடியுள்ள நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தங்களின் 130 கடைகளை மூடியுள்ளது.
ஆனால் KFC, Pizza Hut மற்றும் Burger King ஆகிய உணவகங்கள் இன்னமும் ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.