விளாடிமிர் புடினுக்கு எதிரான கருத்து... பறக்கும் விமானத்தில் ரஷ்ய அமைச்சர் மர்ம மரணம்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation Death
By Arbin May 22, 2023 07:54 PM GMT
Report

உக்ரைன் போர் தொடர்பில் விளாடிமிர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த ரஷ்ய அமைச்சர் ஒருவர் பறக்கும் விமானத்தில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல முக்கியஸ்தர்கள் மர்ம மரணம்

மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் ஊடுருவிய ரஷ்ய படைகள், கடும் பின்னடைவை எதிர்கொண்டும் 453 நாட்களாக போரிட்டு வருகிறது.

விளாடிமிர் புடினுக்கு எதிரான கருத்து... பறக்கும் விமானத்தில் ரஷ்ய அமைச்சர் மர்ம மரணம் | Ukraine War Condemned Minister Mystery Death Credit: Facebook

இந்த நிலையில், ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பல முக்கியஸ்தர்கள் மர்மமான முறையில் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது விளாடிமிர் புடினுக்கு எதிராக உக்ரைன் போர் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

46 வயதான Petr Kucherenko கியூபாவில் இருந்து தொழில்முறை பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா திரும்பிய நிலையில், விமானத்தில் வைத்து நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனையடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு, மருத்துவர்கள் விமான நிலையத்திலேயே சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

ஆனால், உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இருதயம் தொடர்பான சிக்கல் காரணமாகவே அமைச்சர் Petr Kucherenko மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் உடற்கூறு ஆய்வில் உண்மை காரணம் தெரியவரும் என்றே நம்பப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிடுங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போக்கு தொடர்பில் அமைச்சர் Petr Kucherenko கடுமையாக விமர்சித்திருந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போருக்கு புறப்படும் ஒருவாரம் முன்னர் அமைச்சர் Petr Kucherenko நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

விளாடிமிர் புடினுக்கு எதிரான கருத்து... பறக்கும் விமானத்தில் ரஷ்ய அமைச்சர் மர்ம மரணம் | Ukraine War Condemned Minister Mystery Death

இன்னும் ஓராண்டு காலத்தில் ரஷ்யா மொத்தமாக அடையாளம் தெரியாமல் மாறக் கூடும், உங்கள் குடும்பத்தினருக்காக ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிடுங்கள் என அவர் தமது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர், உயர் பொறுப்புகளில் செயல்பட்ட சுமார் 40 பேர்கள் இதுவரை மர்மமாக மரணமடைந்துள்ளனர்.

கடந்த மாதம் புடின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரும் கோடீஸ்வரரும் பிரித்தானியாவுடன் தொடர்பில் இருந்தவருமான 77 வயது Nikolay Bortsov என்பவர் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் போரில் புடினை ஆதரிப்பதாக கூறியே, Nikolay Bortsov மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US