உக்ரைன் போர் 2025 இல் முடிவடையும்! ஜெலென்ஸ்கி கணிப்பு
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2025 இல் முடிவடையும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கணித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி நம்பிக்கை
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான போர் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ITV நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளித்தால், எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புடின் மீண்டும் போருடன் திரும்ப மாட்டார்" என்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை தெளிவுப்படுத்தினால் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
மேலும் பேச்சுவார்த்தைகளின் மூலம் போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் போரை முடிவுக்கு கொண்டுவருவது உண்மையாகிவிடும் என்று ஜெலென்ஸ்கி நம்புகிறார்.
ஆனால் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |