மரியுபோலில் 10,000 அப்பாவி மக்கள் மரணம்: 48-வது நாளாக தொடரும் போரின் சமீபத்திய தகவல்கள்
Russia
Ukraine
UkraineRussiaWar
Mariupol
UkraineRussiaNews
By Ragavan
உக்ரைன் ரஷ்யா இடையியே இன்று 48-வது நாளாக போர் தொடர்ந்துவரும் நிலையில், மரியுபோல் நகரத்தில் மட்டும் இதுவரை 10,000 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போர் 48-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே மரியுபோல் நகரத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய போர் பற்றிய சமீபத்திய 10 தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
-
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யாவின் தாக்குதலால் 10,000-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளார். நிலைமை இப்படியே போனால் மரியுபோலில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 20,000-த்தை தாண்டும் என்று அவர் கூறினார்.
- ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்த உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மாஸ்கோவை இத்தகைய செயல்களில் இருந்து தடுக்க கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
- ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை தடை செய்வதன் மூலம் தனது படைகளை திரும்பப் பெறுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முயன்றது மற்றும் அதைப் பின்பற்றுவதற்கு நட்பு நாடுகளை ஊக்குவித்தது.
-
48 நாட்கள் நடந்த போரில் 19,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைன் நகரமான மரியுபோல் மீதான தாக்குதலில் ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளியான செய்திகளை சரிபார்க்க பிரித்தானிய உளவுத்துறை முயற்சித்து வருகிறது.
- ரஷ்யா மற்றும் பெலாரஸ் செய்தி நிறுவனங்களின்படி, ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாயன்று பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்து உக்ரைன் மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.
- ரஷ்ய இராணுவ ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், விரைவில் ஒரு பெரிய தாக்குதல் நடக்கும் என்று நம்புவதாகவும், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
-
மரியுபோலில் ரஷ்யப் படைகள் நகரைக் கைப்பற்றத் தள்ளும்போது உக்ரேனியப் படைகள் "சூழ்ந்து தடுக்கப்பட்டுள்ளன" என்று Zelenskyy-ன் அலுவலக அதிகாரியான Myhaylo Podolyak ட்வீட் செய்தார்.
- ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் மாஸ்கோவில் விளாடிமிர் புடினுடனான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். ரஷ்யாவின் "தாக்குதல் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது" என்று அவர் கூறினார்.
-
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ராணுவ நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.









2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US