உக்ரைன் போருக்கு பின்னணியில் இவர்கள் தான்... வெறும் ரஷ்யா மட்டுமல்ல: போப் பிரான்சிஸ் வெளிப்படை
பல வல்லரசுகளின் நலன்களை கருத்தில் கொண்டே உக்ரைன் போர் ஓராண்டுகளாக நீடித்து வருவதாகவும், ரஷ்யா மட்டும் அதற்கு காரணமல்ல எனவும் போப் பிரான்சிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஏகாதிபத்திய நலன்களால்
ஓராண்டு காலமாக உக்ரைனில் நீடிக்கும் இந்த கொடூரமான போரானது ஏகாதிபத்திய நலன்களால் தான் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய நாட்டின் நலன்கள் மட்டும் இதன் பின்னணியில் இருப்பதாக தாம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
@getty
மட்டுமின்றி தேச நலன்களை பின்னுக்கு தள்ளுவது என்பது சாம்ராஜ்யங்களின் உண்மையான முகம் எனவும் போப் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் போர் முடிவுக்கு வரவும், அமைதி திரும்பவும் தாம் ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரிடையாக பேச தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியை நேரில் சந்தித்து, இந்த போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வைக்க தாம் முயற்சி மேற்கொண்டதாகவும் போப் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
@reuters
பல முறை பல சந்தர்ப்பங்களில் விளாடிமிர் புடினை தாம் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், புடினுக்கு தெரியும் இந்த விவகாரத்தில் தாம் எப்போதும் தயார் நிலையில் இருப்பேன் என்பது என்றார் போப் பிரான்சிஸ்.
புடினுக்கு ஆதரவானவர்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதாக தகவல் வெளியான இரண்டாவது நாள், வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேரிடையாக சென்று, போர் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த விளாடிமிர் புடின் ஒரு வாய்ப்பளித்தால் தாம் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@getty
இத்தாலிய சுவிஸ் செய்தி ஊடகம் ஒன்றில் நேர்முகம் அளித்திருந்த போப் பிரான்சிஸ், ரஷ்ய போர் தொடர்பில் விரிவாக விவாதித்துள்ளார்.
அர்ஜென்டினா நாட்டவரான போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பலமுறை அழைப்பு விடுத்துள்ளதுடன், தாம் விளாடிமிர் புடினுக்கு ஆதரவானவர் என கூறப்படுவதை மொத்தமாக மறுத்துள்ளார்.