581 நாட்களாக நீடிக்கும் உக்ரைன் போர்: இதுவரை ரஷ்யா இழந்துள்ள வீரர்கள் எண்ணிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் இன்று மட்டும் ரஷ்யா தன்னுடைய 320 வீரர்களை இழந்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போரானது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி 581வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதல், பீரங்கி தாக்குதல் என இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த போர் தாக்குதலில் எதிரி படைகளின் தினசரி இழப்பு குறித்து உக்ரைன் ஆயுதப்படை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று மட்டும் அதாவது போரில் 581வது நாளில் மட்டும் ரஷ்யா 320 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அத்துடன் 3 டாங்கிகள், 4 கவச வாகனங்கள், 24 ட்ரோன்கள் ஆகியவற்றையும் ரஷ்யா உக்ரைனிடம் இழந்துள்ளது.
மொத்தத்தில் போர் தொடங்கியதில் இருந்து இது நாள் வரை ரஷ்யா கிட்டத்தட்ட 2,76,990 ராணுவ வீரர்களை இழந்துள்ளது என உக்ரைன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது சரிபார்க்கப்படவில்லை, மேலும் போர் தொடங்கியதில் இருந்தே வீரர்கள் இழப்பு அல்லது ராணுவ இழப்பு குறித்து ரஷ்யா அரிதாகவே தகவலை பகிர்ந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |