ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் பயணம்: உக்ரைன் தென்கொரியா சந்திப்புக்கு போட்டியா?
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் திடீர் பயணமாக வடகொரியாவுக்குச் சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன், தென்கொரிய ஜனாதிபதி, உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் பயணம்
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Andrei Belousov, திடீர் பயணமாக வடகொரியாவுக்குச் சென்றுள்ளார்.
Pyongyang சர்வதேச விமான நிலையத்தில் வடகொரிய பாதுகாப்புத்துறை அமைச்சரான No Kwang Chol, Belousovஐ வரவேற்க, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்ய ஊடகங்கள் இந்த சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், Belousovஇன் வடகொரிய பயணம் எதற்காக என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
வடகொரிய ஊடகங்களோ அந்த சந்திப்பை உறுதி செய்யவேயில்லை.
ரஷ்ய உக்ரைன் போரில் வடகொரியாவின் தலையீடு பல நாடுகளை எரிச்சலடையச் செய்துள்ளது.
ஏற்கனவே, வடகொரியா 10,000க்கும் அதிகமான வீரர்களை ரஷ்ய வீரர்களுடன் இணைந்து போரிட உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், புடினுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவ உதவியும் அனுப்பிவருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், தென்கொரியாவுடன் எல்லா விடயங்களிலும் போட்டிபோடும் மனப்பான்மையைக் கடைப்பிடித்துவருகிறது வடகொரியா.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், தென்கொரிய ஜனாதிபதியான Yoon Suk Yeol, உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Rustem Umerovஐ சியோலில் சந்தித்தார்.
ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பில் உளவுத்துறை தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பில் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்தே ஏட்டிக்குப் போட்டியாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் வடகொரியாவுக்குச் சென்று வடகொரிய பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |