உக்ரைன் நிலைமை மோசம்: இப்படியே போனால்.. முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுடைய நிலைமை மோசமாக உள்ளதாகவும், நிலைமை இப்படியே நீடித்தால் போரில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவர்.
இப்படியே போனால் போரில் தோல்விதான்
இன்றைய சூழ்நிலையில் போரில் மாறுதலை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும் கருவிகள் ஏதாவது உக்ரைனிடம் உள்ளனவா என்றால், இல்லை என்கிறார் Dmytro Kuleba.
உக்ரைனுடைய நிலைமை மோசமாக உள்ளது என்று கூறும் அவர், இப்படியே போனால் உக்ரைனுக்கு தோல்விதான் என்கிறார்.
என்றாலும், போரின் முதல் சில மாதங்கள், இதைவிட மோசமாக இருந்தன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்.
நேட்டோ பாதுகாப்பு வழங்குவதில்லை
கீவ்வின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிராந்தியத்துக்கு நேட்டோ அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்க முன்வந்தால் அது உக்ரைனில் போர்ச்சூழலை மாற்றக்கூடும் என்கிறார் Dmytro Kuleba.
ஆனால், நேட்டோ தான் வாக்களித்தபடி முன்போல் பாதுகாப்பு வழங்குவதில்லை என தான் நம்புவதாகத் தெரிவிக்கும் அவர், அது அமெரிக்காவின் விருப்பத்தை சார்ந்துள்ளது என்கிறார்.
நேட்டோ அமைப்பின் ஒன்று அல்லது அதற்கு அதிகமான உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது நேட்டோ அமைப்பிலுள்ள அனைத்து நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம் என்னும் விதியை சுட்டிக்காட்டும் Dmytro Kuleba,
ஆனால், உண்மையிலோ, அது ஒரே ஒரு வாக்கியத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அது என்னவென்றால், ’அமெரிக்கா நமது கூட்டாளிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும்’ என்பதாகும் என்கிறார் அவர்.
அத்துடன், இந்த வாக்கியம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு உரியது என்கிறார் Dmytro Kuleba.
சரி, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், உங்கள் நாட்டை நான் பாதுகாக்க மாட்டேன் என்று கூறுவாரானால் என்ன ஆகும், நேட்டோவின் பாதுகாப்பே இல்லை என்று பொருளாகிவிடும் அல்லவா?
அப்புறம், தான் என்ன நினைத்தாலும் அதைச் செய்ய புடினுக்கு எந்த தடையும் இல்லாமல் போய்விடும் என்கிறார் Dmytro Kuleba.
அதாவது, உறுப்பு நாடுகளை நேட்டோ அமைப்பு பாதுகாக்க வேண்டும். ஆனால், நேட்டோ இப்போது அப்படி செய்வதில்லை. அது அமெரிக்க ஜனாதிபதி சொல்வதற்கேற்பதான் தலை ஆட்டுகிறது என்கிறார் Dmytro Kuleba.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |