தப்பிய குறி... உடல் சிதறி பலியான புடினுக்கு நெருக்கமானவரின் மகள்: உக்ரைன் மீது சந்தேகம்
படுகொலை சம்பவமானது அலெக்சாண்டர் டுகினுக்கு வைக்கப்பட்ட குறி - ஆனால் அவர் நூலிழையில் தப்பியதாக தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் இந்த அலெக்சாண்டர் டுகின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான ராணுவ அதிகாரியின் மகள் மாஸ்கோ நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான வட்டத்தில் உள்ளவரும் புடினின் தத்துவவாதி என அறியப்பட்டவருமான அலெக்சாண்டர் டுகின் என்பவரின் மகளே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்கோ நகருக்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட இந்த இந்த படுகொலை சம்பவமானது அலெக்சாண்டர் டுகினுக்கு வைக்கப்பட்ட குறி எனவும் ஆனால் அவர் நூலிழையில் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தர்யா டுகின் உடல் சிதறி பலியாகியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் இந்த அலெக்சாண்டர் டுகின். அதனாலையே அவர் மீது குறிவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், உக்ரேனிய தீவிரவாதிகளே இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளனர் என புடினுக்கு நெருக்கமான அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அலெக்சாண்டர் டுகினை படுகொலை செய்ய திட்டமிட்டவர்களிடம் அவரது மகள் சிக்கிக்கொண்டதாக Donetsk பகுதியின் தலைவர் Denis Pushilin தெரிவித்துள்ளார்.
@NC
ஐரோப்பாவையே ரஷ்யா தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் காலம் வெகுதொலைவில் இல்லை என கூறி வருபவர் அலெக்சாண்டர் டுகின். மேலும் கிரிமியா மீதான தாக்குதலை அடுத்து புதிய ரஷ்யா என்ற திட்டத்தை முன்வைத்தவரும் இந்த அலெக்சாண்டர் டுகின் தான்.
உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டில் ரஷ்யா கொண்டுவராவிட்டால் அது யூரேசியா முழுவதும் பெரும் ஆபத்தாக முடியும் என கூறி வருகிறார் அலெக்சாண்டர் டுகின்.
ரஷ்யாவுக்கு ஆதரவான படைகளை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டு அமெரிக்க நிர்வாகம் டுகின் மீது தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.