மூழ்குவதற்கு முன் கொழுந்துவிட்டு எறிந்த மாஸ்க்வா கப்பல்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்
கருங்கடலில் இரு தினங்களுக்கு முன் உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பல் பற்றி எறிந்த பொது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில், மாஸ்க்வா கப்பல் பயங்கரமாக பற்றி எரிவதும், அதைச் சுற்றி சில மீட்பு கப்பல்கள் இருப்பதும், தூரத்தில் சில இராணுவ கப்பல்கள் மாஸ்க்வா கப்பலை நோக்கி வருவதும் காண முடிகிறது.
ஏப்ரல் 13-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில், உக்ரைன் அதன் இரண்டு நெப்டியூன் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் மிக முக்கிய போர்கப்பல்களில் ஒன்றான மாஸ்க்வா கப்பலை தாக்கியதாகவும், இதில் கேப்டன் உட்பட அதிலிருந்த 500 பேரும் கொல்லப்பட்டதாகவும் கீவ் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரில் இழந்த மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக மாஸ்க்வா மூழ்கியது, ரஷ்ய இராணுவ கௌரவத்திற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா நேரு முதல் உக்ரைனின் கீவ் மற்றும் லிவிவ் நகரங்களை தொடர்ந்து ஏவுகணைகள் மூலம் கடுமையாக தாக்கிவருகின்றன.
மேலும், ரஷ்யாவின் போர் கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மட்டுமின்றி, ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளாலும் இடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதற்கான அறிகுறி என்றும் கூறப்படுகிறது.
மாஸ்க்வா கப்பல் மூழ்குவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 10: மொஸ்க்வா செவஸ்டோபோல் துறைமுகத்திற்கு அருகில் இருக்கும்போது எடுக்கப்பட்ட சாட்டிலைட் படம்
ஏப்ரல் 7: ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் சொந்த துறைமுகமான ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோலில் எடுக்கப்பட்ட மொஸ்க்வா படம்
நெப்டியூன் ஏவுகணையின் சோதனைத் தாக்குதல் (2019)



