போரை உடனடியாக நிறுத்துங்கள்: ரஷ்யாவின் நிலக்கரி மன்னன் எச்சரிக்கை!
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்யாவின் முன்னணி உரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி மன்னரான ஆண்ட்ரே மெல்னிசென்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மீதான ரஷ்ய போர் மூன்றாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ரஷ்யா மீதும் அந்த நாட்டின் தொழிலதிபர்கள் மீதும் பல உலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
REUTERS/Sergei Karpukhin
இதனால் கடந்த 24ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புதின் தொடங்கிய போரை நிறுத்தி, அமைதியை பரவச்செய்யுமாறு அந்த நாட்டின் பிரபல பணக்கார தொழிலதிபர்களான மிகைல் ஃப்ரிட்மேன், பியோட்ர் அவென் மற்றும் ஒலெக் டெரிபாஸ்கா ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தவகையில், உக்ரைன் தாயாருக்கு பெலாரஸ்ஸில் பிறந்த ரஷ்ய குடிமகன் மற்றும் முன்னணி உரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி மன்னரான ஆண்ட்ரே மெல்னிசென்கோ(50) உக்ரைனின் மீதான இந்த போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சகோதர மக்கள் ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு உயிரிழப்பது மிகுந்த மன வேதனை தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தித்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் குறிப்பில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் பிரத்தியேக போரானது விரைவில் நிறுத்தப்பட வேண்டும், ஏற்கனவே உலக சந்தையில் தானியங்களுக்கான உரங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் இது மிகவும் அவசியமாகிறது.
கோவிட் தொற்றால் ஏற்கனவே உலகளாவிய சந்தையில் உணவு சங்கலி பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் இந்த போரால் உணவு சங்கலியானது மேலும் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது ஐரோப்பாவில் இன்னும் அதிகமான உணவு பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உலகின் ஏழ்மையான நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் எனவும் ரஷ்யாவின் மிகப்பெரிய உரம் மற்றும் நிலக்கரி உற்பத்தியாளரான ஆண்ட்ரே மெல்னிசென்கோ தெரிவித்துள்ளார்.
புதினுக்கு இவ்வளவு நோய்களா.! போருக்கு இதுவே காரணம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்