திசை திரும்பும் உக்ரைன் போர்... நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் பக்கம் புடின் திரும்பக்கூடும் என எச்சரிக்கை
உக்ரைன் போர் திசைதிரும்பலாம் என ஐரோப்பிய ஒன்றிய அலுவலர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் பக்கம் கவனத்தை திருப்பும் புடின்
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளி நடவடிக்கைகள் சேவைகளின் செக்ரட்டரி ஜெனரல் என்னும் பொறுப்பில் இருக்கும் Stefano Sannino, சிறப்பு ஆபரேஷன் என்ற பெயரில் உக்ரைனை ஊடுருவிய ரஷ்ய ஜனாதிபதி புடின், தற்போது நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கெதிரான போர் என்னும் கருத்துக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Picture: AP
புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள விடயம்
புதன்கிழமை, போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக ஜேர்மனி தெரிவித்தது. ஜேர்மனியைத் தொடர்ந்து அமெரிக்கா முதலான நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளன.
இப்படி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை, நேரடியாக போரில் தலையிடுவதாகத்தான் ரஷ்யா எடுத்துக்கொள்வதாக கிரெம்ளின் தெரிவித்திருந்தது.
ஆக, Stefano Sannino கூறுவதுபோல, உக்ரைன் மீதிருந்த புடினுடைய கவனம் இப்போது நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கெதிராக திரும்பியுள்ளது.
Picture: Shutterstock