56-வது நாளாக தொடரும் உக்ரைன்-ரஷ்ய போர்: சமீபத்திய முக்கிய தகவல்கள்
ரஷ்யா - உக்ரைன் போர் இன்று 56-வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிரெமின்னா நகரத்தை ரஷ்யா இன்று கைப்பற்றியது.
ரஷ்யாவுடனான போருக்கு முன்னர் 18,000 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்த கிரெமின்னா நகரம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட முதல் நகரமாக மாறியுள்ளது. இது உக்ரைனின் கிழக்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட முதல் நகரமாகும்.
இதனிடையே, கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கமும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி மற்றும் விளாடிமிர் புடினின் மகள்கள் உட்பட 14 ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
Kherson மற்றும் Mykolaiv பகுதிகளை ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த ரஷ்யா 'தவறான வாக்கெடுப்புக்கு' தயாராகி வருவதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மரபுவழி ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தும், அணு ஆயுதம் அல்ல என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகிறார். தற்போது உக்ரைனில் அடுத்த கட்ட ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா நுழைந்துள்ளது.
உக்ரைனுக்கு புதிய ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய தொகுப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று கூறியது. இதில் அதிகமான ஆயுதங்களும் ஆயிரக்கணக்கான தோட்டாக்களும் அடங்கும்.
உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy நாட்டில் ராணுவச் சட்டத்தை ஜூன் 24 வரை நீட்டிக்க முன்மொழிந்துள்ளார். இராணுவச் சட்டத்தை அதிகரிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் Zelenskyy அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டக் காலம் ஏப்ரல் 25-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
சமீபத்திய வீடியோ காட்சிகளில், Bears என்று அழைக்கப்படும் நான்கு ரஷ்ய Tu-95 அணு குண்டுவீச்சு விமானங்கள், உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் கலுகா பகுதியில் பறப்பதைக் காண முடிந்தது. ரஷ்ய இராணுவம் அணுவாயுதத் தாக்குதல்களைப் பயிற்சி செய்வதாக அஞ்சப்படுகிறது.
உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் புச்சா நகரில் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவுரவ பட்டம் வழங்கினார் என்று AFP செய்தி நிறுவனம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
மரியுபோல் எஃகு ஆலையில் இன்னும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பதுங்கி உள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான நடைபாதை (Humanitarian Corridors) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உக்ரைனின் இர்பின் நகரில் 269 பேரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் என தெரியவந்துள்ளது.