உண்மையை மறைக்க இரவோடு இரவாக ரஷ்யா செய்யும் வேலை!

Russia Ukraine Belarus Night UkraineRussiaWar
By Ragavan Mar 20, 2022 03:40 AM GMT
Report

உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைக்க ரஷ்ய இராணுவ வீரக்ளின் சடலங்கள் இரவில் பெலாரஸுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்களின் எண்ணிக்கை மீதான கவனத்தை ஈர்க்காமல் இருக்க இரயில் மற்றும் விமானங்கள் மூலம் பெலாரஸுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா (RFE) மூலம் பெறப்பட்ட காட்சிகள் மார்ச் மாத தொடக்கத்தில் பெலாரஷ்ய நகரமான ஹோமல் வழியாக இராணுவ ஆம்புலன்ஸ்கள் செல்வதை காட்டுகின்றன.

எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்த ஆம்புலன்சுகள் காயமடைந்த மற்றும் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களால் நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ஆயுதங்களை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்!

RFE ஒரு மருத்துவ அதிகாரியை மேற்கோள் காட்டி, மார்ச் 13 வரை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் Homel-ல் இருந்து ரஷ்யாவிற்கு ரயில்கள் அல்லது விமானம் மூலம் அனுப்பப்பட்டது என அவர் கூறியதாக தெரிவித்துள்ளது.

உண்மையை மறைக்க இரவோடு இரவாக ரஷ்யா செய்யும் வேலை! | Ukraine War Russian Corpses Shipped Belarus NightPicture: Twitter/ASLuhn/EPA

மின்ஸ்கிற்குப் பிறகு பெலாரஸின் இரண்டாவது பெரிய நகரமான ஹோமல், கிழக்கில் ரஷ்யாவையும் தெற்கே உக்ரைனையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

நாட்டின் சர்வாதிகாரி அலெக்சாண்டர் லுகாஷென்கோ புடினின் போரை ஆதரிக்கிறார் மற்றும் உக்ரேனுக்குள் நுழைவதற்கு ஊக்கமளிக்கும் முக்கிய ரஷ்ய இராணுவப் பிரிவுகளை நாட்டில் நிலைநிறுத்த அனுமதித்துள்ளார்.

ஹோமலில் வசிப்பவர்கள் RFE-யிடம் காயமடைந்த ரஷ்ய வீரர்கள் நகரத்தில் உள்ள மூன்று தனித்தனி மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும், உள்ளூர் நோயாளிகள் வருகையை நிர்வகிப்பதற்கு முன்கூட்டியே வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தனர்.

"அங்கு பல ரஷ்யர்கள் காயமடைந்துள்ளனர், இது திகிலூட்டுகிறது. பயங்கரமாக சிதைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முழுவதும் அவர்களின் முனகல்களைக் கேட்கமுடியவில்லை" என்று ஹோமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

உண்மையை மறைக்க இரவோடு இரவாக ரஷ்யா செய்யும் வேலை! | Ukraine War Russian Corpses Shipped Belarus NightImage: AFP via Getty Images

உக்ரைனின் செர்னோபிலில் இருந்து வடமேற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெலாரஸ்யா நகரமான Mazyr-ல் உள்ள உள்ளூர்வாசிகள், புட்டினின் படைகளால் சவக்கிடங்குகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை நகரமான நரோல்யாவில், முன்னாள் மோட்டார் டிப்போவில் ரஷ்ய கள மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர், மேலும் காயமடைந்த ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு, ஹோமலுக்கு மாற்றப்பட்டு பின்னர் ரஷ்யாவிற்குச் செல்வதற்கு முன்பு சுருக்கமாக சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

ரஷ்யாவை சாராமல் இருக்க ஜேர்மன் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய ஆதரவு!

உக்ரைன் மீதான படையெடுப்பில் 500-க்கும் குறைவான வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டின்படி 7,000 இறப்புகள் என்று தெரிவித்துள்ளது.

பென்டகனின் புதுப்பிப்பு ரஷ்யாவின் இராணுவத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகக் கூறியது - மூன்று வார சண்டையில் 30,000 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உக்ரேனின் இராணுவமும் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளது, 1,300 துருப்புக்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

GalleryGallery
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US