நாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டோம்: உக்ரைனிடம் பிடிபட்ட ரஷ்ய கர்னல் பரபரப்பு பேட்டி!
உக்ரைன் மீது போரிடுவதற்கு நாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, உக்ரைன் மண்ணை சர்வாதிகாரிகளிடம் இருந்து காப்பாற்றுவதாக நினைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவத்திடம் பிடிபட்ட ரஷ்ய தளபதி அஸ்டாகோவ் டிமிட்ரி மிகைலோவிச் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட தேசிய காவலர் படையின் லெப்டினன்ட் கர்னல் அஸ்டாகோவ் டிமிட்ரி மிகைலோவிச் உக்ரைன் ராணுவத்திடம் பிடிப்பட்டதை தொடர்ந்து, இன்று உக்ரைன் ராணுவத்தினரால் அவர் நேர்காணல் செய்யப்பட்டுள்ளார்.
அப்போது பேசிய ரஷ்ய தளபதி டிமிட்ரி மிகைலோவிச், உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்ய ராணுவத்தினர் மீது தயவுசெய்து உங்கள் கருணையை வழங்குங்கள், ஏனென்றால் உங்கள் நாட்டினுள் புகுந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
This, out of #Ukraine, is 100% one of the most incredible videos I have ever seen.
— Jackie Singh ?? ?? (@hackingbutlegal) March 6, 2022
This Russian POW has the heart of a lion ? pic.twitter.com/KIx1rsN0CZ
ரஷ்ய ராணுவத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு இந்த போரில் துளிக்கூட விருப்பம் இல்லை, மேலும் எங்களுக்கு உக்ரைனில் சர்வாதிகார அரசு நடைபெறுவதாகவும், அதை தூக்கியெறிந்து சாதாரண மக்களுக்கு உதவவேண்டும் என்பது போன்ற போதனைகள் பெருமளவு ஊட்டப்பட்டுள்ளதால் நாங்கள் இங்கு தாக்குதல் நிகழ்வை நடத்திதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனியர்களே தயவுசெய்து ரஷ்ய இராணுவம் மற்றும் ஃபெடரல் தேசிய காவலர் துருப்புக்கள் சேவையில் இருப்பவர்கள் மீது கருணை காட்டுங்கள், இந்த போருக்காக அவர்கள் வெக்கபடுகிறார்கள், அவர்களுக்கு உங்களை கொள்ளும் எண்ணம் துளிகூட இல்லை, இப்பொது நீங்கள் காட்டும் கருணை அவர்கள் ரஷ்யாவிற்கு திரும்பியதும் அனைவரிடமும் நிச்சியமாக எடுத்துரைப்பார்கள்.
ஆனால் உக்ரைனின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மிகவும் அவமானமாக உணர்கிறேன், அதேசமயம் உக்ரைன் மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், போர் குறித்த முடிவுகள் விரைவாக அறிவிக்கப்பட்டதால், எங்களுக்கு யோசிக்க நேரம் கிடைக்கவில்லை, ஆனால் தனிப்பட்ட முறையில் நான் இந்த எல்லைக்குள் நுழைந்த போது எனக்கு பிடித்த தொழில்முறை குத்துசண்டை வீரர்களான ஒலெக்சாண்டர் உசிக் மற்றும் வாசிலி லோமச்சென்கோ எங்களுக்கு எதிராக நிற்கும் போது இந்த போர் குறித்த சந்தேகம் எனக்கு வலுப்பெற்றது.
அவர்கள் என்னிடம் சொன்னார்கள் எங்கள் நாட்டு மக்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறார் என்று என்னிடம் தெரிவித்தார்கள்.
இதையடுத்து, தளபதி டிமிட்ரி மிகைலோவிச் ரஷ்ய துருப்புகளுக்கு ஒரு வலுவான செய்தியையும் இந்த நேர்காணல் மூலம் முன்வைத்துள்ளார்.
அதில், நான் உங்களிடம் கெஞ்சுகிறேன், அனைத்தும் தாமதம் ஆகுவதற்கு முன்பு நிறுத்தி விடுங்கள் ரஷ்யாவால் இங்கு வெல்ல முடியாது.
இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். நான் கட்டாயப்படுத்தப்பட்டேன், மிரட்டப்பட்டேன் அல்லது உரை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் சரி, நான் இதை நேரடியாக உங்களிடம் தெரிவிக்கிறேன்.
எனது தாய்நாட்டிற்குள் யாராவது அத்துமீறி நுழைந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் உக்ரைன் மக்கள் செய்கிறார்கள் எனவே உக்ரைனியர்களே சரி.
மரணத்தை விதைக்க கூடாது, வாழ்வை விதைப்பதே சிறந்தது. ரஷ்ய வீரர்களுக்கு அவ்வாறு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது என கூறி தனது நேர்காணலை முடித்துள்ளார்.