உக்ரைனில் வீடு வீடாகச் சென்று தாக்கும் புடின் ஆதரவு கூலிப்படையினர்: முதன்முறையாக வெளியான வீடியோ
உக்ரைனுக்குள் ரஷ்யப் படையினருடன் புடின் ஆதரவு கூலிப்படையினரும் நுழைந்துள்ளதாக பல நாட்களாகவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முதன்முறையாக அவர்கள் வீடு வீடாகச் சென்று தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Wagner Group என்று அழைக்கப்படும் இந்த கூலிப்படையினர் டான்பாஸ் பகுதியிலுள்ள Popansa என்ற இடத்தில், உக்ரைன் படையினர் தங்கியிருக்கும் ஒரு வீட்டிற்குள் கையெறிகுண்டு ஒன்றை வீசுவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
அந்த பகுதியில் முழுமையாக வீடுகளே இல்லாத நிலையில், மிச்சமிருக்கும் ஒரு வீட்டைக் கூட விடாமல் அங்கு தங்கியிருக்கும் உக்ரைன் வீரர்களை சரணடையச் செய்வதற்காக இந்த கூலிப்படையினர் முயற்சி செய்கிறார்களாம்.
அதாவது, உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஏமாற்றமே மிஞ்சியதால், மே 9ஆம் திகதி ரஷ்ய வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு முன், உக்ரைனின் கிழக்குப் பகுதியாகிய டான்பாஸ் பகுதியை எப்படியாவது முழுமையாகக் கைப்பற்றிவிடத் துடிக்கிறார் புடின்.
இதற்கிடையில், ரஷ்யப் படைகள் டான்பாஸ் பகுதியில் முன்னேற இயலாமல் தடுமாறி வருவதாக பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ள நிலையில், நேரடியாக ஜெயிக்க முடியாத ரஷ்யப்படையினர், எப்படியாவது அப்பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், இந்த கூலிப்படையினர் ரஷ்யப் படையினருடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.