ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை... உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைக்கும் நிபந்தனை
- ரஷ்ய படைகள் வெளியேறினால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை ஜெலென்ஸ்கி அறிவிப்பு.
- உணவு தானிய ஏற்றுமதி குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் முக்கிய பேச்சுவார்த்தை
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த அனைத்து பகுதிகளில் இருந்தும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் அப்போது தான் அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒத்துழைப்பு தரும் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 175 நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று சுமார் 100 நாட்களை கடந்துள்ளது.
மேலும் இதுவரை நடைபெற்ற மூன்று சுற்று அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முக்கிய போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளப்படாமல் முடிவடைந்தது.
‼️Ukraine will negotiate with #Russia only if the invaders leave all occupied territories in #Ukraine, - Volodymyr Zelenskyy. pic.twitter.com/Ecvb1UkwgL
— NEXTA (@nexta_tv) August 18, 2022
இந்தநிலையில் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை (Antonio Guterres) லிவிவ் நகரில் சந்தித்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
President Zelenskyy, after a meeting with the UN Secretary General, said that the #UN should ensure the safety of the #Zaporozhye Nuclear Power Plant, its demilitarization and complete liberation from the invaders. pic.twitter.com/JuMqKNN0r2
— NEXTA (@nexta_tv) August 18, 2022
கூடுதல் செய்திகளுக்கு: போதையில் ஆட்டம் போடும் பின்லாந்தின் இளம் பெண் பிரதமர்: வைரல் வீடியோ
இதனைத் தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனையும் வியாழன்கிழமை (Recep Tayyip Erdogan) சந்தித்து பேசிய ஜெலென்ஸ்கி உணவு தானிய ஏற்றுமதி மற்றும் அணு உலை பாதுகாப்பு குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
The first photo from the meeting between Erdogan and Zelenskyy. pic.twitter.com/DG6AGkYDPw
— NEXTA (@nexta_tv) August 18, 2022