ரஷ்யா களமிறக்கிய வடகொரிய வீரர்கள்... மொத்தமாக நொறுக்கிய உக்ரைன் படை
உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறக்கப்பட்ட வடகொரிய elite வீரர்கள் பலரை உக்ரைன் படைகள் துடைத்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
10,000 வடகொரிய வீரர்கள்
உக்ரைன் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், வடகொரியாவின் elite வீரர்கள் என கொண்டாடப்படும் சிறப்புப் படையினர் 40 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மொத்தம் 10,000 வடகொரிய வீரர்கள் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ள நிலையிலேயே, 40 elite வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வடகொரியாவும் ரஷ்யாவும் ஒன்றாக களமிறங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆயுதங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.
ரஷ்யாவின் Kursk பிராந்தியத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ள நிலையில், மீட்டெடுக்கும் பொருட்டு ரஷ்யா போராடி வருகிறது. இந்த நிலையிலேயே Kursk பிராந்தியத்தில் களமிறக்கப்பட்டுள்ள வடகொரிய வீரர்கள் பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இரக்கம் காட்டுவதாக இல்லை
ஆனால், ரஷ்ய மண்ணில் வடகொரிய ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதிலிருந்து, வடகொரிய ராணுவத்தின் திறன்கள் குறித்து நிபுணர்கள் பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
உக்ரேனிய மூத்த தளபதி ஒருவர் தெரிவிக்கையில், வடகொரிய வீரர்கள் நம்பத்தகுந்த சக்தி என கருத முடியாது என்றார். வடகொரிய வீரர்களை எதிர்கொள்ள உக்ரைன் வீரர்கள் அச்சப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
மட்டுமின்றி, ரஷ்ய ஆதரவாக களமிறக்கப்பட்டுள்ள வடகொரிய வீரர்கள் மீது இரக்கம் காட்டுவதாகவும் இல்லை என்றார். வடகொரிய வீரர்களை ஒரு இக்கட்டான நிலைக்கு ரஷ்யா தள்ளியுள்ளது என்பது மட்டும் உறுதி என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |