அழுக்கான சிறை, புழுக்கூழ் உணவு..ரஷ்ய சிறையில் கொடூரம்: விவரிக்கும் உக்ரேனிய பெண்
Ukrainian woman express tortures in gulag prison: ரஷ்ய சிறையில் 19 மாதங்கள் அனுபவித்த கொடூரங்கள் தற்போதும் மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக, உக்ரேனிய பெண் சிப்பாய் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சிறையில் இருந்து விடுதலையாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகும், சக கைதிகளின் அலறல் சத்தங்கள் கெட்ட கனவுகளை தருவதாக உக்ரேனிய பெண் சிப்பாய் தெரிவித்துள்ளார்.
19 மாதங்கள் சிறையில்
உக்ரேனிய பெண் சிப்பாயியான ஹலினா ரஷ்ய Gulag சிறையில் 19 மாதங்கள் துயரங்களை அனுபவித்தவர் ஆவார்.
உறைபனி போன்ற குளிரான, அழுக்கான சிறை அறையில் அடைக்கப்பட்ட ஹலினாவுக்கு, புழுக்கள் நிறைந்த கூழ் ஊட்டப்பட்டது.
அதே நேரத்தில் ரஷ்ய தேசபக்தி பாடல்களை பாடவும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த சிறையில் கூச்சல்களால் தூக்கம் கெட்டுள்ளார்.
இந்த நிலையில், 31 வயதாகும் ஹலினா தான் விடுதலையாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், ரஷ்யக் காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்ட சக கைதிகளின் அலறல் சத்தங்கள் இன்னும் கெட்ட கனவுகளைத் தருவதாக கூறுகிறார்.
சுமார் 20 கிலோ எடையை இழந்தேன்
டெய்லி மெயில் ஊடகத்திடம் பேசிய அவர், தான் அனுபவித்த அதிர்ச்சிகளையும், மீறி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். கைதியாக இருந்தபோது ஓலெனிவ்காவில் தான் அனுபவித்த எதையும் விடக் கொடூரமான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகளுக்கு அவர் உள்ளானார்.

"நான் ஒட்டுமொத்தமாக சுமார் 20 கிலோ எடையை இழந்தேன். ரஷ்யாவில், அவ்வப்போது எங்களின் உடல் எடை சரிபார்க்கப்பட்டது. அப்படி ஒருமுறை எடை பார்த்த பிறகு, எனக்கு வழங்கப்படும் உணவின் அளவை அவர்கள் அதிகரித்தனர்.
கட்டாயப்படுத்தப்பட்டு கஞ்சி ஊட்டிவிட்டனர்; ஆனால், அவ்வளவு உணவை உட்கொள்வது எனக்கு சாத்தியமற்றதாக இருந்தது. என் உடல் அந்த அளவு உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிர்ஷ்டவசமாக இது நீண்ட காலம் நீடிக்கவில்லை" என்றார்.
சிறைவாசத்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஹலினா, விடுதலையான பிறகு பல அறுவை சிகிச்சைகளையும், மறுவாழ்வு சிகிச்சைகளையும் மேற்கொண்டார். தற்போது அவர் ஒரு சிறப்புப் படைப் பிரிவில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
