ரஷ்ய டாங்கிகளை ஓடஓட சுட்டுவீழ்த்திய உக்ரைன் பெண்கள்: பரபரப்பு வீடியோ காட்சிகள்
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவப்படைகளின் டாங்கிகளை ஓடஓட சுட்டுவீழ்த்தி அந்தநாட்டின் பெண்கள் பாதுகாப்பு படை மிரட்டியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா இன்றுடன் 15வது நாளாக தனது தாக்குதலை நடத்திவரும் நிலையில், உக்ரைன் படை வீரர்களின் தொடர் தடுப்பு தாக்குதலால் ரஷ்ய ராணுவத்தின் முன்நகர்வு பெரும்பாலான இடங்களில் நிதானமடைந்துள்ளது.
மேலும் நாளுக்கு நாள் ரஷ்ய போருக்கு உக்ரைனில் எதிர்ப்பு அதிகரித்து கொண்டு வருவதால், ஆண்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் என பெருவாரியான மக்கள் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துவருகின்றனர்.
Ювелірна робота нашої артилерії по ворожим танкам в районі н.п. Бородянка. pic.twitter.com/LwK01cwpWy
— Defence of Ukraine (@DefenceU) March 10, 2022
இதனால் உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யா ராணுவத்தின் முன்னகர்வு தடுத்து நிறுத்தப்பட்டு, பெருவாரியான இடங்களில் தடுப்புத்தாக்குதலையே ரஷ்யா நடத்திவருகிறது.
இந்த நிலையில், தலைநகர் கீவ்யின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய டாங்கிகளை உக்ரைன் பெண் பாதுகாப்பு படை ஓடஓட சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டியுள்ளது.
இதுகுறித்த வீடியோ ஆதாரக்காட்சியை உக்ரைன் பாதுகாப்பு துறை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு, பீரங்கிகள் மூலம் உக்ரைனின் தாடிவைத்த பெண்கள், எதிரி நாட்டின் டாங்கிகளை நகைவேலைப்பாடு செய்வதுபோல் சுட்டுவீழ்த்தியுள்ளனர் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது.
??? Військово-морські сили ЗСУ мають чим порадувати цього ранку #stoprussia pic.twitter.com/KadNG0XuPM
— Ukrinform (@UKRINFORM) March 10, 2022
இதைபோல இன்று அதிகாலை மற்றொரு பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டாங்கியையும் உக்ரைன் பாதுகாப்பு படையினர் ட்ரோன்ஏவுகணை தாக்குதல் மூலம் அபாரமாக சுட்டுவீழ்த்தியுள்ளனர்