டிரம்பை சந்திக்க அமெரிக்க செல்லும் ஜெலென்ஸ்கி: சுற்று பயணத்தின் நோக்கம் இதுதான்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவலை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய X தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது உக்ரைனின் முக்கிய பிரதிநிதிகள் குழுவும் ட்ரம்புடனான சந்திப்பிற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதிகள் சந்திப்புக்கு அப்பால், உக்ரைனிய பிரதிநிதிகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஜெலென்ஸ்கி பயணத்தின் நோக்கம்
ஜெலென்ஸ்கியின் அமெரிக்க பயணத்தின் முக்கிய நோக்கமாக, வான் பாதுகாப்பு மற்றும் உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல் திறன் அதிகரிப்பு ஆகியவை இருக்கும் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |