புடின் எனக்கு நண்பர்., புடின் எனக்கு கொலையாளி: டிரம்பின் கருத்துக்கு ஜெலென்ஸ்கி பதிலடி
Ukraine Zelenskyy legals putin a killer: ரஷ்ய ஜனாதிபதி புடினை “கொலையாளி” என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புடின் ஒரு கொலையாளி
சீனாவில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது நண்பன் என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாக புடினை ஒரு கொலையாளி என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக CNN செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்த கருத்தில், புடினை எப்படி அழைப்பது என்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட விருப்பம், ஆனால் உக்ரைனை பொறுத்தவரை ரஷ்ய ஜனாதிபதி ஒரு எதிரி மற்றும் கொலையாளி என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

புடினை அவர் நண்பர் என்று கூறுவது அவருக்கு போதுமான சர்வதேச அழுத்தம் இல்லை என்பதை காட்டுகிறது. ஆனால் உக்ரைனை பொறுத்தவரை இரவும் பகலும் உயிர்கள் கொல்லப்படுவதால் உலக மக்களுக்கு அவர் ஒரு கொலையாளியாக தான் தெரிகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் டிரம்ப், புடின் மற்றும் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற முத்தரப்பு உச்சி மாநாட்டின் இடையே கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படைகள் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்தனர்.
இதில் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 110 ஏவுகணைகளும், 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களும் ஏவப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் தலைநகர் கீவ்வில் உள்ள முக்கிய பாலங்கள், ரயில் கட்டமைப்புகள் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன.