உக்ரைன் போரை முடிக்க ஐரோப்பிய நாடுகளின் புதிய திட்டம்: Buffer Zone யோசனைக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இடையக மண்டலங்களை உருவாக்கலாம் என்ற யோசனைக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இடையக மண்டலத்திற்கு ஜெலென்ஸ்கி மறுப்பு
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆலோசிக்கப்பட்டு வரும் இடையக மண்டலம்(Buffer Zone) யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சுமார் 40 கி.மீ இடையக மண்டத்தை உருவாக்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாக வெளியான அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.
அதில், நவீன கால போர் முறைகளில் இந்த “இடையக மண்டலம்” என்பது பலனளிக்காத மற்றும் போர் எதார்த்தங்களுக்கு பொருந்தாதது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரில் இடையக மண்டலம் பயன்பெறுமா?
மேலும் ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், போர் நடவடிக்கையில் ட்ரோன் பயன்பாடுகள் பரவலான நிலையில், இந்த இடையக மண்டலம் என்பது “இறந்த மண்டலம்” என்றே நாங்கள் கருதுகிறோம், சிலர் இதை “சாம்பல் மண்டலம் என கருதுகிறார்கள் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நவீன கால போர் நடைமுறையில் பாரம்பரிய இடையக மண்டலங்கள் பெரும்பாலும், பயனற்றதாகவே உள்ளது, ஏனெனில் இத்தகைய பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தான் பின்வாங்க வேண்டும்
அப்படியே இந்த இடையக மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றால், உக்ரைன் தங்களுடைய எந்தவொரு பகுதியையும் இதற்காக விட்டுக் கொடுக்காது.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதியில் இருந்து ரஷ்யா வேண்டுமென்றால் அதிக தூரம் பின் வாங்கலாம் என ஜெலென்ஸ்கி பரிந்துரைத்துள்ளார்.
இறுதியில், உக்ரைனுடனான போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை, மாறாக போரை நீட்டிக்க தான் வழியை தேடி வருகிறது என்றும் ஜெலென்ஸ்கி தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |