உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை: ரஷ்யாவிற்குள் புகுந்து தாக்கக்கூடிய திறன்
3000 கிலோமீற்றர் தூரம் அடையக்கூடிய புதிய Flamingo ஏவுகணையை உக்ரைன் தயாரித்து வருகிறது.
இது ரஷ்யாவின் உள் பகுதிகளை தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை, பிரித்தானியாவின் MilanionGroup உருவாக்கிய FP-5 ஏவுகணையை ஒத்ததாகவும், அதே தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஆகஸ்ட் 14-ஆம் திகதி உக்ரைனின் FirePoint பாதுகாப்பு நிறுவனத்தில் எடுத்த புகைப்படங்கள் மூலம் Flamingo ஏவுகணையின் உருவம் உலகிற்கு தெரியவந்தது.
இது ட்ரம்ப்-ஜெலேன்ஸ்கி சந்திக்கவிருந்த நேரத்தை வெளியானதால், இது ஒரு தந்திரமான அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
Flamingo ஏவுகணை அம்சங்கள்
- 3000 கி.மீ. ரேஞ்ச்
- 1000 கிலோ வெடிகுண்டு
- 6 மீற்றர் இறக்கைகள்
- மணிக்கு 900 கி.மீ. வேகம்
- செயற்கைக்கோள் nevigation அமைப்பு
இதற்கு முன், உக்ரைன் அதன் Neptune ஏவுகணைமூலம் ரஷ்யாவின் Moskva கப்பலை அளித்துள்ளது. அதேபோல் உக்ரைனின் Hrim-2 ஏவுகணை 500 கி.மீ. தூரம் வரை தாக்கக்கூடியது.
Flamingo ஏவுகணை இவை அனைத்தையும் மிஞ்சும் திறனுடன் உக்ரைனின் ராணுவ சக்தியை பலப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine Flamingo missile, 3000km range cruise missile, Ukraine vs Russia missile, Zelensky Trump meeting, FP-5 missile Ukraine, Ukraine long-range missile, Flamingo missile production