நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு: குரோஷியாவில் உக்ரைனியர் கைது
Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனியர் கைது
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு 2022ம் ஆண்டு நோர்ட் ஸ்ட்ரீம்(Nord Stream) எரிவாயு குழாய் வெடிகுண்டு வைத்து சிதைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் புதன்கிழமையன்று உக்ரைனை சேர்ந்த விளாடிமிர் இசட்(Vladimir Z) என்ற நபர் குரோஷியாவில் உள்ள புலா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவரான விளாடிமிர் இசட், செர்ஹி கே(Serhil K) என்ற நபருடன் இணைந்து இந்த நாச வேலையை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் போலி அடையாள அட்டையை காண்பித்து இடைதரகர்கள் மூலம் ஜேர்மனியின் ரோஸ்டாக் துறைமுகத்தில் உள்ள படகை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்த படகில் சென்று டென்மார்க்கின் பார்ஹோம்(Bornholm) தீவுக்கு அருகே உள்ள நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 வது எரிவாயு குழாயை வெடிபொருட்கள் வைத்து சிதைத்துள்ளனர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு நோர்ட் ஸ்ட்ரீம் வழித்தடங்களும் கடுமையான சேதமடைந்துள்ளன.

நாடு கடத்தப்பட்ட உக்ரைனியர்
விளாடிமிர் இசட் குரோஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜேர்மனிக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனிக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, அவர் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |