வெகுநாள் பசியை தீர்த்து கொண்ட உக்ரைன்! மொத்தமாக அழித்து ரஷ்யாவுக்கு தந்த ஷாக்... முழு வீடியோ
ரஷ்யாவின் வெடிமருந்து கிடங்கு, வாகனங்கள் உள்ளிட்டவற்றை மொத்தமாக அழித்து உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது. 100 நாட்களை கடந்து நடந்து வரும் போரில் சில நாட்களாக ரஷ்யாவின் கை முழுவதுமாக ஓங்கியுள்ளது.
இந்த நிலையில் வெகுநாள் பசியில் உள்ள புலி தனது பசியை தீர்த்து கொண்டது போல ஒரு தரமான சம்பவத்தை உக்ரைன் படையினர் செய்துள்ளனர். கார்கிவ் பிராந்தியத்தில் உக்ரேனிய ராட்சச பீரங்கி மூலம் தரமான சம்பவம் நடத்தப்பட்டது.
?? Ukrainian artillery hit the invaders in the Kharkiv region As a result, an ammunition depot, MTLB, Z-mobile, armored vehicles, two army trucks were destroyed.?#ArmUkraineNow #Ukraine️#StandWithUkraine️ #StopPutin pic.twitter.com/Yqg2CKJMDJ
— Eng yanyong (@EngYanyong) June 16, 2022
அந்த தாக்குதலின் விளைவாக ரஷ்யாவின் ஒரு வெடிமருந்து கிடங்கு, கவச வாகனங்கள், இரண்டு ராணுவ டிரக்குகள், ஆயுதங்களை ஏந்தி சென்ற வண்டி ஆகியவை சுக்குநூறாக அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆதார வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.