ரஷ்ய ராணுவ வாகனங்களை தகர்த்தெறிந்த உக்ரைன் பீரங்கிகள்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்ய ராணுவ வாகனங்களை உக்ரைன் பீரங்கிகள் தாக்கி அழித்த வீடியோவை உக்ரேனிய ஆயுத படைகளின் தளபதி வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரேனிய ஆயுத படைகளின் தளபதி வெளியிட்டுள்ள வீடியோவில், குடியிருப்பு பகுதியில் நின்று கொண்டிருக்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள் மீது உக்ரைன் படைகள் பீரங்கி மூலம் தாக்கி அழக்கின்றனர்.
Ukrainian UAV video showing Ukrainian artillery strikes on Russian vehicles.https://t.co/P8345ZTKuX pic.twitter.com/PILb7Y0Nt9
— Rob Lee (@RALee85) March 20, 2022
குறித்த சம்பவத்தை உக்ரைன் படையகள் ஆளில்லா விமானம் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
மார்ச் 19ம் திகதி நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 14,400 துருப்புகளை இழந்துள்ளது.
95 விமானங்கள், 115 ஹெலிகாப்டர்கள், 466 டேங்கிகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரேனிய ஆயுத படைகள் தெரிவித்துள்ளது.