உக்ரைனிலிருந்து வெளியேற முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய எல்லை பாதுகாவலர்கள்: பின்னர் தெரியவந்த உண்மை
உக்ரைனிலிருந்து வெளியேறும் கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட எல்லை பாதுகாப்பு வீரர்கள், அந்தக் காரில் அசாதாரண உயரத்துடன் ஒரு பெண் இருப்பதைக் கவனித்துள்ளார்கள்.
நீண்ட தலைமுடி, பெண்கள் அணியும் தொப்பி மற்றும் லெக்கின்ஸ் அணிந்திருந்த அந்த பெண்ணை அவர்கள் விசாரிக்க, பிறகுதான் அவர்களுக்கு உண்மை தெரிந்தது, அந்த நபர் பெண்ணே அல்ல.
ஆம், அந்த 26 வயது ஆண், நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்காக பெண் வேடம் அணிந்துள்ளார். ஆனால், உக்ரைனில், 18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உக்ரைன் இராணுவத்தில் இணைந்து ரஷ்யப் படைவீரர்களை எதிர்த்துப் போரிடவேண்டும் என அறிவுறுதப்பட்டுள்ளது. இந்நிலையில், போரிட விரும்பாத அந்த நபர் பெண் வேடமணிந்து தப்பி மால்டோவா நாட்டுக்குச் சென்றுவிட முயற்சிக்கும் நேரத்தில், வசமாக எல்லை பாதுகாவலர்களிடம் சிக்கிக்கொண்டார்.