இப்படியே போனால் 3வது உலகப் போர் வெடிக்கும்! பிரபல நாட்டின் அதிபர் எச்சரிக்கை
உக்ரைனில் நடந்து வரும் ராணுவ மோதல் 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் என பிரபல தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மோதல் ராணுவ நடவடிக்கையிலிருந்து விரிவடைகிறது, இது 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோல் விலைகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் உணவு, போக்குவரத்து, உரங்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய தாக்கம், சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதில் உள்ள பாதுகாப்பின்மையில் வெளிப்படுத்தப்படுகிறது.
சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுப்பதன் மூலம், மேற்கு மற்றும் உலகின் மிக முக்கியமான தலைவர்களுக்கு பிடித்திருக்கும் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியும் என்று மதுரோ நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பணவீக்கம் மற்றும் ஐரோப்பாவில் மோதல் பரவுவதற்கான சாத்தியமான விளைவுகளை கட்டுப்படுத்த வெனிசுலா ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறது என மதுரோ குறிப்பிட்டுள்ளார்.