போருக்கு நடுவே பூத்த காதல்! ராணுவ உடையில் திருமணம் செய்து கொண்ட உக்ரேனிய தம்பதி... நெகிழ்ச்சி வீடியோ
உக்ரைனில் போருக்கு நடுவே ராணுவ உடையில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
உக்ரைனில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும்பாலும் கடுமையான மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் நிலையில் தம்பதியின் திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி மக்களுக்கு ஒரு நேர்மறை நம்பிக்கையை கொடுத்துள்ளது.
Paul Ronzheimer என்ற பத்திரிக்கையாளர் Lesya மற்றும் Valeriy தம்பதி திருமண வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் ராணுவ உடையில் உள்ளனர், அவர்களை சுற்றியுள்ளவர்கள் மெலிதான இசைகளை இசைத்து பாட்டு பாடி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்துகின்றனர்.
This couple, Lesya and Valeriy, just got married next to the frontline in Kyiv. They are with the territorial defense. pic.twitter.com/S6Z8mGpxx9
— Paul Ronzheimer (@ronzheimer) March 6, 2022
இதை பார்த்த பலரும், படுகொலைகளுக்கு நடுவே இப்படியொரு காதலை பார்ப்பது நெகிழ்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளன்ர்.
குறித்த வீடியோ 1.5 மில்லியனுக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது.
Lesya மற்றும் Valeriy ஆகிய இருவரும் உக்ரேனிய ராணுவத்தின் ஒரு பிரிவான பிராந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.