குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவிற்குள் உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் இராணுவத்தின் ஆளில்லா விமானங்கள், ரஷ்யாவின் சிஸ்ரன்(Syzran) நகரில் உள்ள ரோஸ் நேபிட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை(Rosneft's oil refinery) தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.
🔥 Ukrainian drones attacked Rosneft's oil refinery in Syzran, starting a fire there
— NEXTA (@nexta_tv) February 19, 2025
Surprising fact: This region was not included in the Russian Defense Ministry's report. According to the ministry, air defense forces destroyed 9 drones during the night:
Russia's Defense… pic.twitter.com/QZwGW2P0Gn
ஆனால் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில், உக்ரைனின் ஒன்பது ஆளில்லா விமானங்கள் ரஷ்ய பிரதேசங்களான பிரையன்ஸ்க், டாடர்ஸ்தான், துலா மற்றும் கருங்கடல் மீது இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை இலக்கு வைக்கும் செயல் உக்ரைனின் மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
சமீபத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ரஷ்யாவின் சுத்திகரிப்பு திறனில் சுமார் 14% ஐ பாதித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |