ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்
ரஷ்ய துருப்புக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் எண்ணெய் நிலையத்தை டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள Steel Horse எனப்படும் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டு நிலையத்த்தை குறிவைத்து உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணெய் நிலையம் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 170 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த தாக்குதலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரஷியாவின் ஓரியோல் மாகாண ஆளுநர் ஆண்ட்ரே கிளிச்கோ தெரிவித்தார். தாக்குதலின் போது 11 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன், உக்ரைன் டிரோன்கள் ரஷ்ய எண்ணெய் வசதிகளை அடிக்கடி இலக்கு வைப்பது இந்த தாக்குதலின் மூலம் தெளிவாகிறது.
இதனை உக்ரைன் அதன் இராணுவ இலக்காக கருதுகிறது. ஆனால், ரஷ் யா இதைப் தீவிரவாத செயல்கள் என வகைப்படுத்துகிறது.
இதைத் தொடர்ந்து, உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் நிலையங்களை தாக்கும் நோக்குடன் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் குர்ச்க் பகுதியில் உள்ள சில கிராமங்கள் தற்போது உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukrainian drones hit oil facility in Russia's Oryol region, Ukraine drone attack on russian oil facility