தோட்டங்களுக்குள் ஒளிந்துகொண்ட ரஷ்ய போர் வாகனங்களைத் தேடித் தேடி துவம்சம் செய்த உக்ரைன் ட்ரோன்கள்: வெளியாகியுள்ள வீடியோ
உக்ரைன் வீரர்களுக்குத் தப்ப, மரங்கள் அடர்ந்த தோட்டங்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்கின்றன ரஷ்யப் போர் வாகனங்கள்.
ஆனாலும், அவற்றை விடாமல் தேடித் தேடிச் சென்று உக்ரைன் ட்ரோன்கள் துவம்சம் செய்யும் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் கிழக்கு உக்ரைனிலுள்ள Zirkuni என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
அதாவது, தாங்கள் உக்ரைன் படைகளிடம் இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அப்படி ஓரிடத்துக்குச் சென்று மறைந்திருந்து உக்ரைன் படைகளைத் தாக்கலாம் என்று ஒரு ரஷ்யப் போர் வாகனம் மரங்கள் அடர்ந்த தோட்டம் ஒன்றிற்குள் சென்று பதுங்கியுள்ளது. அந்த வாகனத்தின் மீது நிற்கும் ரஷ்யப் படைவீரர்கள் சிலர் எப்படி மறைந்திருந்து தாக்குவது என திட்டமிடுவதைக் காட்டும் காட்சியை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
ஆனால், மிகச்சரியாக அந்தப் போர் வாகனத்தைக் கவனிக்கும் ட்ரோன் ஒன்று, குறி தவறாமல் அதைத் தாக்க, அந்தப் போர் வாகனம் வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகிறது. அந்தப் போர் வாகனம் வெடித்துச் சிதற, அந்த இடத்தில் பயங்கரமாக தீப்பற்றி எரிவதை அந்த வீடியோவில் காணலாம். பாவம், அதன் மீது அமர்ந்திருந்தவர்கள் கதி என்ன ஆயிற்றோ தெரியவில்லை!
ரஷ்யப் படைகள் எடுக்கும் தவறான முடிவுகளால் அந்நாடு தொடர்ந்து பெரும் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், Zirkuni கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ புடினுக்கு மற்றொரு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.