போர் முனையில் எரிபொருளுடன் சென்ற ரஷ்ய ரயில்... உக்ரைன் செய்த சம்பவம்
உக்ரைன் போர் முனையில் எரிபொருளுடன் சென்ற ரஷ்ய ரயில் ஒன்றை ட்ரோன்களால் தாக்கி உக்ரைன் படைகள் நெருப்பு கோளமாக மாற்றிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
நெருப்பு கோளமாக
உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவே அந்த காணொளியை வெளியிட்டுள்ளது. ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா வழியாகச் செல்லும்போது எரிபொருள் நிரப்பப்பட்ட ரயில் தீப்பிடித்து எரிகிறது.
ட்ரோன்களால் துல்லிய தாக்குதலுக்கு இலக்கான ரயிலில் மூன்று கிடங்குகள் நெருப்பு கோளமாக வெடித்துள்ளது. உக்ரைன் ட்ரோன்கள் அதிரடித் தாக்குதலை முன்னெடுப்பதற்கு முன்பு அந்த ரயில் வெர்க்னி டோக்மாக்-மோலோசான்ஸ்க்-ஃபெடோரிவ்கா ரயில் பாதையில் பதுங்கிச் செல்வதைக் காணலாம்.
மிகக் கொடூரமான
உக்ரைனின் elite GUR பிரிவே மே 24 ஆம் திகதி சவாலான இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த ஆபரேஷனானது சபோரிஜியாவில் விளாடிமிர் புடினின் படைகளுக்கு சப்ளை செய்யும் ஒரு முக்கிய தளவாடத்தை அழித்தது என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று சகோதரர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்ட புடினின் மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில், ரஷ்யா உக்ரைன் முழுவதும் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இது 2022 படையெடுப்பிற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |