பிரித்தானியா எங்களை விலங்குகளைப் போல நடத்துகிறது: உக்ரைன் அகதி ஒருவர் பரபரப்பு புகார்
பிரித்தானிய உள்துறை அலுவலகம் தங்களை விலங்குகளைப் போல நடத்துவதாக தாங்கள் உணர்வதாக உக்ரைன் அகதி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், உக்ரைனிலிருந்து தப்பி வந்த Dmytro Kyrychenko (42), அவரது மனைவியான Oksana (41) மற்றும் தம்பதியரின் மூன்று பிள்ளைகள், கிழக்கு லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார்கள்.
தம்பதியரின் பிள்ளைகளான Vlad (14) மற்றும் Roman (12) ஆகிய இருவரும் Cumberland Community School என்ற பள்ளியில் இணைந்து ஒரு மாதமாக கல்வி கற்று வருகிறார்கள். இந்நிலையில், Leedsஇலுள்ள மற்றொரு ஹொட்டலுக்குச் செல்லுமாறு தங்களுக்கு கூறப்பட்டுள்ளதாக Dmytro தெரிவிக்கிறார்.
புதிதாக ஒரு இடத்துக்குச் செல்ல மறுத்தால், தாங்கள் வீடற்றவர்களாக தெருவில் தங்க வேண்டி வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் Dmytro குடும்பத்தினர்.
தம்பதியருக்கு Tymofii (4) என்ற மகனும் இருக்கிறான். போர் வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, Dmytro குடும்பத்தினர் உக்ரைனிலிருந்து வெளியேறி, போலந்துக்குச் சென்று, அயர்லாந்து வழியாக இங்கிலாந்தை அடைந்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு தங்களை வேறிடம் செல்லுமாறு கூறிவிட்டதைத் தொடர்ந்து தாங்கள் விலங்குகள் போல உணர்வதாகத் தெரிவிக்கும் Dmytro, தான் தன் பிள்ளைகளைக் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அவர்கள் ஏற்கனவே பல கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் மன அழுத்தத்திற்குள்ளாவதை தான் விரும்பவில்லை என்கிறார் அந்த தந்தை.
Image Credit: SWNS