புடினுடைய அணிவகுப்புப் படகையே வெடித்துச் சிதறவைத்த உக்ரைன் படைகள்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் காட்சி
புடின் இராணுவ அணிவகுப்புக்கும், தனது கடற்படை கப்பல்களை ஆய்வு செய்வதற்கும் பயன்படுத்தும் படகு ஒன்றையே வெடித்துச் சிதறவைத்துள்ளார்கள் உக்ரைன் படைவீரர்கள்.
கடலில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே அந்த படகு வெடித்துச் சிதறியுள்ள நிலையில், அதில் யார் யார் பயணித்தார்கள், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.
அந்த வெண்ணிறப் படகு கருங்கடலில் பாம்புத் தீவுக்கு அருகே வேகமாக பயணித்துக்கொண்டிருக்கும்போதே, அதன் மீது உக்ரைன் படைகள், ட்ரோன் மூலம் லேசர் வழிகாட்டும் வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளார்கள்.
புடின் அணிவகுப்பின்போது தன் வீரர்கள் முன் உரையாற்றுவதற்காக அந்த படகைப் பயன்படுத்துவதுண்டு என்பதற்கான ஆதாரமாக புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், புடினுடைய படகையே உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகத் தாக்கி மூழ்கடித்துள்ளார்கள்.
ட்ரோன் கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த அதிரவைக்கும் வீடியோவை உக்ரைன் கடற்படை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டாலும், இதுவரை அதன் உண்மைத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.