12 நேட்டோ நாடுகளின் கூட்டுப்பயிற்சி... பிரித்தானியப் படைப்பிரிவை முற்றாக தோற்கடித்த உக்ரேன்
கடந்த ஆண்டு எஸ்தோனியாவில் நடந்த உருவகப்படுத்தப்பட்ட நேட்டோ போர் பயிற்சியில் உக்ரேனியப் படைகள் ஒரு பிரித்தானியப் படைப்பிரிவை முற்றாக அழித்ததாக தற்போது தகவல் கசிந்துள்ளது.
உக்ரேனியப் படைகளால்
12 நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 16,000க்கும் மேற்பட்ட துருப்புக்கள் பங்கேற்ற ஒரு இராணுவப் பயிற்சியில் ட்ரோன்களால் மோதும் ஒரு தீவிரமானப் போர்க்களத்தை உருவாக்கியிருந்தனர்.

அதில், ஆயிரக்கணக்கான துருப்புக்களைக் கொண்ட ஒரு போர்க் குழுவில் பிரித்தானியப் படைப்பிரிவும் எஸ்டோனியப் பிரிவும் உக்ரேனியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன.
இது நேட்டோவிற்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு பயங்கரமான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. நிஜமான போர்க்களத்தை உருவகப்படுத்தி, ட்ரோன்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த மோதலில், உக்ரைன் சாதித்துள்ளது.
அதுவும் பிரித்தானியாவை மொத்தமாக தோற்கடித்துள்ளது. உக்ரேனியப் போரின் தொடக்க நாட்களைப் போலவே, டாங்கிகள் மற்றும் துருப்புகள் முன்னேறுவதாக உருவகப்படுத்தியிருந்தனர்.
அத்துடன், உக்ரைன் போரை துருப்புகள் தற்போது எதிர்கொள்வது போன்ற சூழலையும் உருவாக்கியிருந்தனர். இந்த நிலையில், நேட்டோ படைகளை எதிர்கொள்ள, உக்ரைனியக் குழு டெல்டாவைப் பயன்படுத்தியது.
அத்துடன், தாக்குதல்களை ஒருங்கிணைக்க, இலக்குகளை அடையாளம் காண மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவையும் உக்ரைன் பயன்படுத்தியுள்ளது.
பயிற்சி ஒன்றில், எஎதிரியாகச் செயல்பட்ட 10 உக்ரேனியர்கள் கொண்ட குழு நேட்டோவை எதிர் தாக்குதல் நடத்தியது, அரை நாளில் 30 போலி தாக்குதல்களை நடத்தி 17 கவச வாகனங்களை அழித்தது.

ட்ரோன்களாலான போருக்கு
இதில் நேட்டோ தரப்பில் கலந்துகொண்ட குழுவின் நிலைமை மிக மோசமாக இருந்தது என்றே எஸ்டோனியா தரப்பில் கூறப்படுகிறது. இதன் விளைவாக ஐரோப்பிய நட்பு நாடுகள் ட்ரோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன, மேலும் ட்ரோன்களாலான போருக்கு தங்கள் படைகளையும் தயார்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், உக்ரைனும் ஜேர்மனியும் இணைந்து தயாரித்துள்ள முதல் தாக்குதல் ட்ரோன் ஒன்றை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிமுகம் செய்தார்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, இது நவீன உக்ரேனிய தொழில்நுட்பம். போரில் சோதிக்கப்பட்டது. AI ஆல் இயக்கப்படுகிறது. இது தாக்கும், வேவு பார்க்கும், நமது வீரர்களைப் பாதுகாக்கும் என்றார்.
கடந்த ஆண்டு, பிரித்தானியாவும் தங்கள் படைகளை போருக்குத் தயாராக' மாற்ற ட்ரோன்களில் 2 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |