உக்ரைனுக்குள் நுழைய முயன்ற ரஷ்ய துருப்புகளை தெறித்து ஓட வைத்த உக்ரேனிய வீரர்கள்!
எல்லை தாண்டி உக்ரைனுக்குள் நுழைய ரஷ்ய துருப்புகள் மேற்கொண்டு முயற்சியை உக்ரேனிய படைகள் முறியடித்துள்ளனர்.
இன்று காலை சுமியின் வடகிழக்கு பகுதியில் ஊடுருவ ரஷ்ய துருப்புகள் மேற்கொண்ட முயற்சியை உக்ரேனிய எல்லை பாதுகாப்பு படை முறியடித்ததாக அந்நகர கவர்னர் Dmytro Zhyvytsky தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் செயலில் Dmytro Zhyvytsky பதவிட்டதாவது, பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்தனர். ஆனால், எல்லை பாதுகாப்பு படை நடத்திய எதிர் தாக்குதலில் அவர்கள் பின்வாங்கினர் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கியதை அடுத்து ரஷ்ய படைகள் சுமிக்குள் எல்லை தாண்டி நுழைந்தது.
ரஷ்ய படைகளை விரட்டியடித்த உக்ரேனிய துருப்புகள்! வெளியான வீடியோ ஆதாரம்
ஆனால், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் சுமி நகரை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளது, ரஷ்யாவின் தளபதிகள் தலைநகர் கீவ் மீதான முன்னேற்றத்தைக் கைவிட கட்டாயப்படுத்தியது மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை மீண்டும் கைப்பற்றியது.