ரஷ்யாவை எதிர்கொள்ள AK-47 துப்பாக்கியுடன் பயிற்சி பெறும் உக்ரைன் நாட்டு மூதாட்டி... வைரலாகியுள்ள ஒரு செய்தி
உக்ரைனை ரஷ்யா ஊடுருவும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்காக, 79 வயது மூதாட்டி ஒருவர் சிறப்புப் படையினருடன் இணைந்து AK-47 துப்பாக்கியுடன் பயிற்சி பெறும் சம்பவம் ஒன்று உலகின் கவனம் ஈர்த்துள்ளது.
நேற்று, Valentyna Konstantynovska என்ற அந்த பெண்மணி AK-47 துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என உக்ரைன் நாட்டு தேசிய படையினரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
உக்ரைன் நாடு முழுவதுமே பொதுமக்கள் ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்காக இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் Valentynaவை உக்ரைன் மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, ஹீரோ என்று கூறி பாராட்டி வருகிறார்கள்.
உக்ரைனில், நான்கு வயது குழந்தைகள் முதல் ஏராளமானோர் ரஷ்யப் படைகளை எதிர்கொள்வதற்காக பயிற்சிகள் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.