ரஷ்யாவின் தலைமையகத்தை அழித்த உக்ரைன்! பீரங்கியால் சுக்குநூறாக்கிய வீடியோ
வீட்டில் உள்ள ரஷ்ய தலைமையகத்தை தாக்குதல் மூலம் உக்ரைன் சுக்குநூறாக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போரிட்டு வருகிறது. எனினும் உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் சரண்டர் ஆகாமல் தொடர்ந்து தீரத்துடன் போராடி வருகிறது.
உலக நாடுகள் பல கூறியும் ரஷ்யா போரிடுவதை நிறுத்தவே இல்லை. உக்ரைன் மீது உக்கிரமாக ரஷ்யா போரிட்டு வருகிறது. போர் தாக்குதலின் ஒரு பகுதியாக உக்ரைன் முக்கிய சம்பவம் ஒன்றை நடத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சியை உக்ரைனின் கிராகன் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி D-30 பீரங்கி தாக்குதல் நடத்திய உக்ரைன் ஒரு வீட்டில் உள்ள ரஷ்ய தலைமையகத்தை முழுமையாக தட்டி தூக்கி அழித்துள்ளது, அந்த இடம் அழிக்கப்படுவதற்கு முன்னர் ரஷ்ய வீரர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதை காண முடிந்தது.
பீரங்கி தாக்குதலையடுத்து அந்த தலைமையகம் முழுவதும் வெடித்து சிதறிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.