அடுத்தடுத்து மாயமாகும் உக்ரைன் மேயர்கள்! தொடரும் ரஷ்ய அட்டூழியம்
உக்ரைனின் கெர்சனில் உள்ள துறைமுக நகரமான Skadovsk-ன் மேயர் கடத்தப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Skadovsk-ன் மேயர் Oleksandr Yakovlyev மற்றும் துணை மேயர் Yurii Palyukh ஆகியோர் இன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
Skadovsk-ன் மேயர் கடத்தப்பட்டதை உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, உக்ரைனில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் தலைவர்களை ரஷ்ய படையெடுப்பாளர்கள் தொடர்ந்து கடத்துகின்றனர்.
Skadovsk மேயர் Oleksandr Yakovlyev மற்றும் துணை மேயர் Yurii Palyukh இன்று கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட உக்ரேனிய அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புகள் ரஷ்யாவிடம் கோரிக்கை வேண்டும் என Dmytro Kuleba வலியுறுத்தியுள்ளார்.
ரஷய் படைகளால் உக்ரைன் மேயர் கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல.
Russian invaders continue to abduct democratically elected local leaders in Ukraine. Mayor of Skadovsk Oleksandr Yakovlyev and his deputy Yurii Palyukh abducted today. States & international organizations must demand Russia to immediately release all abducted Ukrainian officials! pic.twitter.com/bmaAuurx9h
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 16, 2022
ஏற்கனவே, தெற்கு நகரமான Dniprorudne-ன் மேயர் Yevheniy Matvieyev மற்றும் Melitopol மேயர் Ivan Fedorov ஆகியோரும் ரஷ்ய படைகளால் கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.